கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த தோப்புக்கொல்லை கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள மின் கம்பங்களில் புதர் செடிகள் அதிக அளவில் குவிந்து காணப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.