தற்போது அனைவரும் போன் பே, ஜி பே, பேடி எம் போன்ற டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதையே விரும்புகின்றனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இதுவரை இல்லாத அளவிற்கு 1,658 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.23.5 லட்சம் கோடி மதிப்பு பரிவர்த்தனை யுபிஐ மூலம் நடைபெற்று இருப்பதாக தேசிய பணப் பரிவர்த்தனை ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும்போது இது 10% அதிகம் என கூறப்பட்டுள்ளது.