தவெக நிர்வாகிகள், கூட்டணியே வேண்டாம், தனித்துப் போட்டியிடலாம் என விஜய்யிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பனையூரில் நடந்த செயற்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, நாம் தமிழர், விசிக கட்சிகளின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் கட்சிப்பணியை மட்டும் பார்க்க விஜய் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், மாநாட்டை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு தந்தமைக்காக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.