நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக உள்ளது மதங்கீசுவர சுவாமி கோயில். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் 'மதங்கீசுவரர்.' இறைவி பெயர் 'ராஜமதங்கீசுவரி.' இந்த ஆலயம் 1100 ஆண்டுகள் பழமையானது. கோயிலின் தலவிருட்சமாக வன்னி, புரசம், வில்வம் என மூன்று விருட்சங்கள் உள்ளன. இங்கு வந்து வணங்கினால் கலை, கல்வி, உயர் பதவி, தொழில் மேன்மை போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.