ஆரோக்கியமான உயிரணுக்களின் உற்பத்திக்கு உதவும் பலாப்பழம்
பலாப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற முக்கியமான சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதிக நீர்ச்சத்து கொண்ட பலாப்பழத்தை ஆண்கள் உட்கொள்வது ஆரோக்கியமான உயிரணுக்களின் உற்பத்திக்கு உதவுவதாக கூறப்படுகிறது. அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் பலாப்பழத்தை முடிந்தளவு சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.