வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இந்த மழையினால் கடலூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்புகள் படையெடுக்க தொடங்கிவிட்டன.
இந்த நிலையில் நேற்று (அக்.,15) ஒரே நாளில் மட்டும் கடலூர் சுற்றுவட்டார பகுதிகளான கடலூர் கூத்தப்பாக்கம், பாரதிக்குப்பம், பெரிய காரைக்காடு , நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 11 தண்ணீர் பாம்புகள், நல்ல பாம்பு 1, சாரை பாம்பு 1 என மொத்தம் 13 பாம்புகள் பிடிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் விடப்பட்டது.