தமிழ்நாட்டில் 4 அடுத்த நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு தகவல் அளித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், "தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெதுவாக நகர்ந்து வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்" என்று தெரிவித்துள்ளார்.