புவனகிரி: குட்கா விற்றவர் கைது
கடலூர் மாவட்டம் புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் காவல் துறையினர் நேற்று(அக்.18) புவனகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது குளத்தெருவில் தாமரை உள்ள வைதேகி என்பவர் பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் காவல் துறையினர் வைதேகியை கைது செய்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.