அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, இன்று 19. 8. 2024 மாலை 4. 00 மணி முதல் கடலூர் மேற்கு மாவட்டத்தில் தொடர் நிகழ்ச்சியாக புவனகிரி பேரூராட்சியில் 12, 16 ஆகிய வார்டுகளில் ஒவ்வொரு அதிமுக உறுப்பினரிடமும் நேரடியாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக புதிய உறுப்பினர் அட்டைகளை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ வழங்கினார். உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.