கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கிற்கு வேத மந்திரங்கள் முழங்க பூஜையில் பங்கேற்ற பெண்கள் மலர் அர்ச்சனை, குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவர் அம்மனுக்கு ஐந்து முக மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.