கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஒன்றியம் மற்றும் நகரம் சார்பில் திராவிட முன்னேற்றக் கழக செயல் வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் புவனகிரி எம். எல். ஏ. துரை. கி. சரவணன், நகரச் செயலாளர் கந்தன் அவைத்தலைவர்கள் நெடுமாறன் மாறன் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை, கட்சி வளர்ச்சி பணி குறித்து ஆலோசனை வழங்கினர். இதில் திராவிட முன்னேற்றக் கழக கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.