கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், கடலூர், திட்டக்குடி, புவனகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இன்று மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இது வியாபாரிகளிடம் கேட்கையில் இன்று, புரட்டாசி மாதம் என்பதால் பொதுமக்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடைகளில் மக்கள் கூட்டம் இல்லாமல் காணப்படுகிறது என தெரிவித்தனர்.