

கோவை: யுகன்டா கலாச்சார விழா
கோவை கே. பி. ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் யுகன்டா 25 மாணவர் கலை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மற்றும் புலமுதன்மையர்கள் இணைந்து திருவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். கே. பி. ஆர் குழுமங்களின் தலைவர் டாக்டர் கே. பி. ராமசாமி தலைமை தாங்கி விழாவைச் சிறப்பித்தார். விழாவில் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக குழு நடனம், தனி நடனம், திறனறிதல், தனிப்பாடல், மெகந்தி, நிழற்படக் காட்சிப்படுத்தல், முக அலங்காரம், ரீல்ஸ் மற்றும் கனெக்ஷன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் விதமாக குதிரை சவாரி மற்றும் 30க்கும் மேற்பட்ட உணவு மற்றும் கலைப் பொருட்கள் அங்காடிகள் அமைக்கப்பட்டிருந்தன.