கோவை: தமிழில் குடமுழுக்கு கோரி போராட்டம்- நாதகவினர் கைது?

61பார்த்தது
கோயம்புத்தூர், மருதமலை அடிவாரத்தில், பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என்ற முழக்கத்துடன், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் நேற்று மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணியில், வேண்டும். வேண்டும். தமிழில் குடமுழுக்கு வேண்டும், அன்னைத் தமிழிருக்க எதற்கு அடுத்த மொழி? , தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் குடமுழுக்கு இல்லாமல் எதற்கு வேற்று மொழி? , தேவாரம், திருவாசகம் பாடி தமிழில் வேள்வி நடத்தி தமிழில் குடமுழுக்கு நடத்தாமல் வேறு பிற மொழிகளில் குடமுழுக்கு செய்வது தமிழக அரசு தமிழர்களுக்கு இழைக்கும் தீங்காகும், நடத்திடு!! நடத்திடு!! தமிழில் குடமுழுக்கு நடத்திடு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாறை மாநில ஒருங்கிணைப்பாளர் உட்பட 50 பேர், மருதமலை பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு துண்டறிக்கை வழங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை அருகில் உள்ள மண்டபத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், அங்கு வைத்து அவர்களை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், காவல்துறை தங்களை மிரட்டியதாகவும், அச்சுறுத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி