சூலூர் - Sulur

கோவையில் இன்ஜினியர் தற்கொலை

கோவையில் இன்ஜினியர் தற்கொலை

கோவை இடையர்பாளையம் யமுனா வீதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (54), சிவில் இன்ஜினியர். இவரது மனைவி கவிதா (44), தனியார் பள்ளி ஆசிரியை. கடந்த 7 ஆண்டுகளாக ஜெகநாதன் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.  கடந்த 1ம் தேதி கவிதா வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார். அப்போது வீட்டில் இருந்த ஜெகநாதன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கிட்டுக் கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் கமலேஸ், தனது தந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా