அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டமைப்பு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சூலூர் மற்றும் சுல்தான்பேட்டை வட்டாரங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். சூலூர் வட்டார தலைவர் ப. வேலுமயில் தலைமை தாங்கினார். சுல்தான்பேட்டை வட்டார தலைவர் P. K. குருசாமி முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் இரா. அ. தங்கராசா, கோவை மாவட்ட பொருளாளர் P. K. ரங்கசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்ற மாநில பேரவைத் தீர்மான அடிப்படையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.