கோவை: குறைந்தபட்ச தகுதிகள் பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும்!

80பார்த்தது
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டது. மேலும், அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் சசிகுமார் பேசுகையில், தமிழகத்தில் பெருகி வரும் மணல் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்த அரசு உடனடியாக ஒரு கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும். இந்த குழுவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னெடுக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுக்கும் அரசின் எந்தவொரு முயற்சிக்கும் எங்களது சங்கம் முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.

டேக்ஸ் :