உதயநிதி துணை முதல்வரானதை கொண்டாடிய திமுகவினர்!

81பார்த்தது
கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி பிரிவு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் தமிழக துணை முதல்வராக பதவியேற்றதை முன்னிட்டு திமுகவினர் இன்று கொண்டாடினர். நகர திமுக சார்பில் நகர செயலாளர் அறிவரசு தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகவும், செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராகவும் பதவியேற்றனர் இதனை தொடர்ந்து, திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி