CRPF பயிற்சி கல்லூரியில் எஸ். ஐ-க்கள் பயிற்சி நிறைவு விழா!

66பார்த்தது
துடியலூர் அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில் உள்ள, சி. ஆர். பி. எப். மத்திய பயிற்சி கல்லூரியில், 567 எஸ். ஐ. , க்கள் பங்கேற்ற பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்தியா முழுவதும் CRPF-ல் பணியாற்ற தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு கோவை மாவட்டம் கதிர்நாயக்கன் பாளையத்தில் உள்ள மத்திய பயிற்சி கல்லூரியில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இங்கு கடந்த ஆண்டு செப். , முதல், 40 பெண்கள் உட்பட, 567 நேரடி சப் இன்ஸ்பெக்டர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உள்நாட்டு பாதுகாப்பு இயற்கை மற்றும் செயற்கை பேரிடர்களை சமாளித்து மக்களை காத்தல் உள்நாட்டு தீவிரவாத கும்பல் நக்சலைட்டுகள் மாவோயிஸ்டுகளிடம் இருந்து நாட்டை காத்தல் தொடர்பான;பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சி நிறைவு விழாவில், சி. ஆர். பி. எப். , மத்திய பயிற்சி கல்லூரியின் முதல்வர் வெங்கடேஷ் பேசுகையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், அமைதியை நிலைநாட்டவும், ஆரோக்கியமான சமுதாயம் அமையவும், சி. ஆர். பி. எப். , வீரர்கள் தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகின்றனர். நம் நாட்டின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை உணர்ந்து, நாட்டுப்பற்று, தியாக உணர்வுடன் ன்பொதுமக்களுடன் இணைந்து, தீவிரவாத சக்திகளை ஒழிக்க ஒன்றிணைந்து பாடுபட வேண்டும், என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி