கோவை மாவட்டம் கோவில்பாளையம், சரவணம்பட்டி, அத்திப்பாளையம், பகுதிகளில் பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
கல்லூரியில் பயிலும் மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தி வருகிறாராகளா விடுதிகளில் போதைப் பொருட்கள் ஏதாவது வைக்கப்பட்டுள்ளதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தங்கராமன் தலைமையில் கோவில்பாளையம் காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தனியாக வீடு எடுத்து தங்கி வரும் நிலையில் அதிகாலையில் இந்த சோதனை நடைபெற்றது. நம்பர் பிளேட் இல்லாத நான்கு பைக்குகள், இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகனங்களின் ஆவணங்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். போதை பொருட்கள் எதுவும் பிடிபடவில்லை.
எனினும், போதை பொருள் பயன்படுத்துவோர் கடத்துவோர் குறித்து தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என, மாணவர்களுக்கு போலீசார் அறிவுறுத்திச் சென்றனர்.