சரவணம்பட்டி, மதுக்கரை பகுதிகளில் இன்று மின்தடை!

64பார்த்தது
கோவை மின்வாரியம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மதுக்கரை, சரவணம்பட்டி துணை மின் நிலையங்களில் இன்று (அக்டோபர் 3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதுக்கரை துணை மின் நிலையத்தின் கீழ் வரும் கே. ஜி. சாவடி, பாலத்துறை, புறவழிச் சாலை, சாவடிபுதூர், காளியாபுரம், எட்டிமடை, எம். ஜி. ஆர். நகர், சுகுணாபுரம், பி. கே. புதூர், மதுக்கரை, அறிவொளி நகர், கோவைப்புதூர் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். சரவணம்பட்டி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி. என். மில், சுப்பிரமணியம்பாளையம், கே. என். ஜி. புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகாஷ் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி