கவுண்டம்பாளையம் மக்களுக்கு கோவை எம்பி நன்றி!

83பார்த்தது
கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அக்டோபர் 3 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், தனக்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார். கோவை வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் குருடம்பாளையம், அசோகபுரம், நாயக்கம்பாளையம் ஊராட்சிகள் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனக்கு கிடைத்த ஆதரவிற்கு எம்பி கணபதி ராஜ்குமார் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டபுத்தூர் ரவி, பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் D. C, தலைமை செயற்குழு உறுப்பினர் T. P. சுப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு, பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி