பர்னிச்சர் குடோனில் கொளுந்து விட்டு எரிந்த தீ விபத்து!

1567பார்த்தது
கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் உள்ள மூக்கையா என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் குடோனில் இன்று (செப்.,10) நண்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குடோனுக்கு அருகில் செல்லும் தாழ்வழுத்த மின்கம்பி வடம் அதிக காற்றினால் ஒன்றுக்கொன்று உரசியதில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பொறி உருவாகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிகிறது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மூன்று தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும், தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி