கோவையில் மாதம்பட்டி, கவுண்டம்பாளையம், தேவராயபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (அக்டோபர் 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாதம்பட்டி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, பேரூர், தீத்திபாளையம், கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம், காளம்பாளையம், தொண்டாமுத்தூர், கெம்பனூர், முத்திபாளையம், புதுப்பாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், தாளியூர், தீனம்பாளையம், உலியம்பாளையம், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரைச்சாவடி ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும். கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் பகுதிகளான நல்லாம்பாளையம், சாய்பாபா காலனி, இடையர்பாளையம், சேரன் நகர், லெனின் நகர் மற்றும் சங்கனூர் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும். இந்த பகுதிகளில் உள்ள பல்வேறு நகர்கள், வீதிகள், காலனிகள் மற்றும் லே-அவுட்களும் மின்தடையால் பாதிக்கப்படும். தேவராயபுரம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், காளியண்ணன்புதூர், புத்தூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாளையம் மற்றும் தென்றல் நகர் ஆகிய பகுதிகளிலும் மின்தடை இருக்கும் எனவே என் வாரியம் தெரிவித்துள்ளது.