கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்னிமடை அருகே ஆர். ஆர் அவென்யூ குடியிருப்பில் நடந்த வழிப்பறி சம்பவத்தை போலீசார் மூன்று மணி நேரத்தில் விரைந்து முடித்துள்ளனர். கோவை தடாகம் பக்திக்கு உட்பட்ட பகுதியில் சிவசங்கர் மற்றும் அவரது மனைவி பார்வதி (64) ஆகியோர் வீட்டு வேலைக்காக பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற சிறுவனை வேலைக்கு அமர்த்தியிருந்தனர்.
நேற்று(செப்.9) மாலை சுமார் 5: 30 மணியளவில், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பார்வதியின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு சஞ்சய் குமார் தப்பியோடினார். உடனடியாக தடாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விரைவான நடவடிக்கையின் மூலம், மூன்று மணி நேரத்திற்குள் சஞ்சய் குமாரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட 10 பவுன் தாலிக்கொடியை மீட்டனர். இந்த சிறப்பான செயலுக்காக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் போலீஸ் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.