ஆயிரம் விளக்கு - Thousand lights

சென்னை: மின்இணைப்பு பெயர் மாற்றம் உட்பட 25 சேவைக்கு ஜிஎஸ்டி விலக்கு

சென்னை: மின்இணைப்பு பெயர் மாற்றம் உட்பட 25 சேவைக்கு ஜிஎஸ்டி விலக்கு

மின்சாதனம் இடமாற்றம், மீட்டர் வாடகை, எரிந்த மீட்டரை மாற்றுவது, மின்இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட 25 சேவைகளுக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து மின்வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் புதிய மின்இணைப்புகளை வழங்கும்போது விண்ணப்பக் கட்டணம், வளர்ச்சிக் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருமுறை செலுத்தக் கூடிய கட்டணத்தை வசூலித்து வருகிறது. மேலும், வீடுகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் மின்பயன்பாட்டுக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அத்துடன், மின்சாதனம் இடம்மாற்றம் உள்ளிட்ட பல சேவைகளுக்கு தனித்தனியே கட்டணம் வசூலிக்கிறது. இதில், மின் பயன்பாட்டு கட்டணத்துக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி கிடையாது. அதேசமயம், மின்சார சேவைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை மின்வாரியம் வசூலிக்கிறது. இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையை ஏற்று விண்ணப்பக் கட்டணம், மின்சாதனம் இடமாற்றம், மீட்டர் வாடகை, எரிந்தமீட்டரை மாற்றுவது, மின்இணைப்பு பெயர் மாற்றம், மின்கட்டண விகிதம் மாற்றம் உள்ளிட்ட 25 சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த மாதம்10-ம் தேதி முதல் முன்கூட்டியேஅமலுக்கு வருவதாக மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


சென்னை
மகனுக்கு பாலியல் தொல்லை... உறவினரை கொன்ற தந்தை
Nov 06, 2024, 05:11 IST/

மகனுக்கு பாலியல் தொல்லை... உறவினரை கொன்ற தந்தை

Nov 06, 2024, 05:11 IST
மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 10 வயது மகன், உறவினரான விஜய்(28) என்பவரின் வீட்டிற்கு கடந்த ஞாயிறன்று சென்றுள்ளார். அப்போது விஜய் அச்சிறுவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு தொல்லை கொடுத்திருக்கிறார். அங்கு வந்த சிறுவனின் தந்தை அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இருப்பினும் கோபத்தில் இருந்த அவர், அன்றிரவே விஜய்யின் வீட்டிற்கு சென்று, அங்கு தூங்கிக்கொண்டிருந்த அவரது தலையில் கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து அந்த நபரை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.