
சென்னை: 2ம் இடத்துக்கே போட்டி: அதிமுக, தவெக குறித்து முதல்வர் கருத்து
ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர், எதிர்க்கட்சி என்று சொல்லும் நிலைக்கு இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (மார்ச் 29) மாலை சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று, கொளத்தூர் தொகுதி இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கினார். இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியது, தமிழக பிரச்சினையாக இருக்கும் இருமொழிக் கொள்கை பற்றி வலியுறுத்திப் பேசிவிட்டு வாருங்கள், நீங்கள் இங்கே ஆதரித்தால் மட்டும் போதாது. அங்கு பேசிவிட்டு வாருங்கள் என்று சொன்னேன். அவரும் பேசிவிட்டு, மறுநாள் சென்னை திரும்பியிருக்கிறார். அப்போது விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்டிருக்கிறார்கள், இருமொழிக் கொள்கைப் பற்றி பேசிவிட்டீர்களா? இருமொழிக் கொள்கைப் பற்றி அழுத்தமாகப் பேசினேன் என்று சொல்லியிருக்கிறார். மறுபடியும் டெல்லிக்கு சென்று பேசிவிட்டு வர வேண்டும் என்று சொன்னேன். இந்த நிலையில்தான் இன்றைக்கு எதிர்க்கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு ஒரு பக்கம் ஆபத்து வந்தால், ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும், அதை எதிர்க்கும் நிலையில் இருக்கும் கட்சிதான் திமுக என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.