விசிக மாநாடு: திருமாவளவன் திட்டவட்டம்

58பார்த்தது
விசிக மாநாடு குறித்து அவதூறு பரப்புவோரை பொருட்படுத்த வேண்டாம் என தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக முகநூல் நேரலையில் அவர் பேசியிருப்பதாவது, மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு என்பது பெண்கள் பங்கேற்கும் மாநாடு. எனவே, எந்தளவுக்கு பெண்களை அழைத்து வர முடியுமோ அந்தளவுக்கு அழைத்து வந்து அவர்களை பாதுகாப்பாக திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும். மாநாட்டை மாலை 4 மணிக்கு தொடங்கி, 8 மணிக்கு நிறைவு செய்ய இருக்கிறோம். வாகனங்களை முன்பதிவு செய்வதோடு, உணவு, குடிநீர் போன்றவற்றை முன்னரே ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆங்காங்கே கடைகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். நம்மை பிடிக்காதவர்கள் தேவையில்லாமல் நமது நிகழ்வுகளில் ஊடுருவ வாய்ப்புள்ளது. அவர்கள் மது அருந்தி புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. நமது அரசியலை சகித்துக் கொள்ள முடியாத சக்திகள், நம்மைப் போல் அரசியல் செய்ய இயலாத சக்திகள் காழ்ப்புணர்ச்சி கொண்டு திட்டமிட்டு அவதூறு பரப்புவார்கள் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி