திமுகவை விமர்சனம் செய்யுங்கள்: ராமதாஸுக்கு ஆர். எஸ். பாரதி பதில்

80பார்த்தது
திமுகவை விமர்சனம் செய்யுங்கள்: ராமதாஸுக்கு ஆர். எஸ். பாரதி பதில்
மருத்துவக் கல்லூரி அனுமதி முறைகேடு தொடர்பாக அன்புமணி மீது சிபிஐ குற்றச்சாட்டு பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து தப்பித்து கொள்ளக் கமலாலயத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் எல்லாம் செந்தில் பாலாஜி வழக்கை எதிர்கொள்ளும் திமுகவை தூற்ற கொஞ்சமும் அருகதை இல்லாதவர்கள் என்று ராமதாஸுக்கு, ஆர். எஸ். பாரதி பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செந்தில் பாலாஜி தியாகி என்றால் ஏமாந்தவர்கள் துரோகிகளா? நீதிபதியாக இருக்க வேண்டிய முதல்வர் செந்தில் பாலாஜிக்கு வழக்கறிஞராகக் கூடாது என அறிக்கை விட்டிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

2016 சட்டமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜி செய்த ஊழல்களை மு. க. ஸ்டாலின் முன்வைத்தாரே எனச் சொல்லும் ராமதாஸ் , ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டிய போது என்ன சொன்னார் என்பது மறந்துவிட்டதா? ‘சொத்துக் குவிப்பு வழக்கு குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நினைவிடமா? அது ஊழலின் சின்னமாகவே பார்க்கப்படும்’ எனக் காட்டமாக அறிக்கைவிட்டுவிட்டு, அந்த நினைவிடம் கட்டிய எடப்பாடி பழனிசாமியிடமே தேர்தல் கூட்டணி வைத்தாரே?

ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டும் எடப்பாடி, பன்னீர்செல்வம் தலைமையிலான பினாமி அரசின் ஊழல்களையும் மறைக்க முடியாது; அதனால் ஏற்பட்ட பாவங்களை கழுவ முடியாது என முன்பு ராமதாஸ் சொன்னார். பாமகவின் பாவங்களை கழுவிவிட்டு, ராமதாஸ் திமுகவை விமர்சிக்கட்டும் என அவர் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி