கவரைப்பேட்டை ரயில் விபத்து: தெற்கு ரயில்வே தகவல்

74பார்த்தது
சென்னை அருகே நேற்றிரவு விபத்துக்குள்ளான மைசூரு - தார்பங்கா பாகமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் மாற்று ரயில் மூலம் இன்று காலை 4. 45 மணியளவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில் கும்மிடிபூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் இரண்டு பெட்டிகள் தீ பிடித்து எரிந்தன. பயணிகள் சிறு காயங்களுடன் தப்பித்த நிலையில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விபத்துப் பகுதியிலிருந்து அனைத்துப் பயணிகளும் மீட்கப்பட்டனர். சிலர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களில் மூவர் கடுமையான காயங்களுடன் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

விபத்தால் பயணம் தடைபட்டு சென்னை சென்ட்ரலில் காத்திருந்த பயணிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நேற்றிரவு 8. 30 மணியளவில் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அனைவரும் தார்பங்கா சிறப்பு ரயில் மூலம் இன்று காலை 4. 45 மணிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி ஏஎன்ஐ

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி