சென்னை முழுவதும் நேற்றிரவு மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

70பார்த்தது
சென்னை மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சென்னை முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மணலி துணை மின்நிலையத்தில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சென்னை மாநகர் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோட்டூர்புரம் மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, மந்தைவெளி, சூளைமேடு, மாதவரம் மற்றும் வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளும் இருளில் மூழ்கின. முக்கிய சாலைகளில் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர். ரயில் நிலையங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.

இந்நிலையில், கொளத்தூரில் மின்வெட்டு ஏற்பட்டு, பல மணி நேரம் ஆகியும் மின்சாரம் வராததால் மின்சாரம் எப்போது வரும் என கேட்க போன மக்களை அங்குள்ள காவல்துறையினர் கைது செய்வோம் என்று மிரட்டியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி