தீபாவளி பண்டிகைக்கு நீங்கள் செய்யவுள்ள செலவுகளை பட்ஜெட்டிற்குள் கட்டுப்படுத்த சில வழிகள் உள்ளன. முதலில் தேவையானவற்றின் லிஸ்ட்டை உருவாக்கி, எதை வாங்கலாம் எதைத் தவிர்க்கலாம் என முடிவு செய்யுங்கள். வாங்கும் பொருட்களின் விலையை மற்ற கடைகளுடன் ஒப்பிட்டு பார்க்கவும். கேஷ்பேக், கூப்பன்கள், ரிவார்டு பாயிண்ட், பரிசுப் பொருட்கள், ஆஃபர் தரும் கடைகள் அல்லது ஆன்லைன் தளங்களை தேர்வு செய்யுங்கள். செலவுகள் குறித்த புரிதலுடன் ஷாப்பிங் செய்தால் பணம் விரயம் ஆவதைத் தடுக்கலாம்.