தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

73பார்த்தது
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும்வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று வழக்கத்தைக் காட்டிலும் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக மணிக்கு 65 கி. மீ. வேகத்திலும், நாளை முதல் வரும் 18-ம் தேதி வரை 55 கி. மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி