அம்பத்தூர் - Ambattur

திருத்தணியில் ரூ. 1 கோடி நூதன மோசடி செய்த 3 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சென்னை பைபாஸ் சாலையில் டிரான்ஸ் இந்தியா என்ற பெயரில் தனியார் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. அந்த நிறுவனம் படித்து வேலையில்லா இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை கவர்ச்சியான விளம்பரம் மூலம் கவர்ந்து ரூ. 10, 800 வீதம் பணம் பெற்றுக் கொண்டு சில அழகு பொருட்களை வழங்கி அதனை உபயோகப்படுத்தி மற்றவர்களை உறுப்பினர்களாக சேர்த்தால், ஒருவருக்கு கமிஷனாக ரூ. 500 வழங்கப்படும் என்று நம்பவைத்துள்ளனர். கமிஷன் கிடைக்கும் என்ற ஆசையில் அவர்களுக்கு தெரிந்தவர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர். இதனை நம்பி படித்து வேலையில்லா இளம் பெண்கள், இளைஞர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இருப்பினும் நிறுவனம் கூறியபடி வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை என்றும், புதியவர்களை சேர்த்தும் கமிஷன் வழங்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர். இதனால், பணம் வழங்கி ஏமார்ந்தவர்களில் 300க்கும் மேற்ப்பட்ட பெண்கள் திருத்தணியில் உள்ள அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது. டி.எஸ்.பி கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் ஏற்படுத்தி தருவதாக நம்பவைத்து நூதன முறையில் மோசடி செய்ததாக பெண்கள் குற்றம் சாட்டினர். இதனை அடுத்து நிறுவன மேலாளர் ரகு மற்றும் அங்கு பணியாற்றி வருபவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். உரிய அனுமதியியுடன் நிறுவனம் நடத்தவில்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரிந்ததால், அலுவலக மேலாளர் மற்றும் பணியாளர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் பணம் மோசடியில் ஈடுபட்டது உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து திருத்தணி பூங்கா நகரை சேர்ந்த சார்ந்த ரகு(29) அவரது மனைவி சத்யா (30) மற்றும் வேலஞ்சேரியை சேர்ந்த நந்தினி (21) ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా