அம்பத்தூர் - Ambattur

நயப்பாக்கம்: தனியார் தொழிற்சாலையில் வருமானத்துறையினர் சோதனை

திருவள்ளூர் அடுத்த நயப்பாக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் மேற்கூரை மற்றும் வாகனத்திற்கு ஹோஸ் தயாரிக்கும் பாலிஹோஸ் தொழிற்சாலையில் 10 மேற்பட்ட வருமானத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  பாலிஹோஸ் நிறுவனம் தொடர்புடைய சென்னை கிண்டி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த நயப்பாக்கத்தில் உள்ள பாலிஹோஸ் குழுமத்திற்கு சொந்தமான வாகனங்களுக்கு பயன்படுத்தும் ஸ்டீல் ஹோஸ் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் பிளாஸ்டிக் மேற்கூரை தயாரிக்கும் தொழிற்சாலையானது இயங்கி வருகிறது. இந்த இரு தொழிற்சாலைகளில் மூன்று கார்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் காலை முதல் தற்போது வரை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சோதனையில் நிறுவனத்தின் கணக்கு வழக்குகள், ஏற்றுமதி இறக்குமதி விவரங்கள், கடைசியாக வருமான வரி தாக்கல் செய்த கணக்கு விவர ஆவணங்கள், வங்கி கணக்கு தொடர்பான விவரங்கள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை நடைபெற்று வந்தாலும் உற்பத்திக்கு எந்தவித பாதிப்பும் இன்றி தொழிற்சாலை இயங்கி வருகிறது.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా