இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரம் மற்றும் திருமலை நாயக்கர் மஹாலை சுற்றுலா பயணிகள் கட்டணம் இன்றி இலவசமாக பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சின்னங்கள் மற்றும் அருங்காட்சியங்களை இலவசமாக பார்க்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.