தஞ்சையில் பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக் கொன்ற குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணி (26) இன்று காலை குத்திக் கொலை செய்யப்பட்டார். காதல் பிரச்சனையில் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மதன் என்ற இளைஞர் ஆசிரியை ரமணியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் பெண் கேட்ட போது, பெற்றோர் மறுத்ததே கொலைக்கு காரணம் என தெரியவந்தள்ளது.