திருவள்ளுர் மாவட்டம், ஆவடி வட்டம் பாண்டேஸ்வரம் கிராமத்தில் இன்று (23. 10. 2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. சா. மு. நாசர் அவர்கள் 496 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு துறைகளின் சார்பாக ரூ. 14. 53 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த. பிரபுசங்கர். இ. ஆ. ப. அவர்கள் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சு. சுதர்சனம் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.