ஆவடி அடுத்த பட்டாபிராம் சி எஸ் ஐ பெத்தேல் திருச்சபை ஆலயம் 25 ஆம் ஆண்டு விழாவில் 500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது
ஆவடி அடுத்த பட்டாபிராம் காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் சி எஸ் ஐ திருச்சபையின் 25 ஆம் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
பட்டாபிராம் தண்டுறை குருசேகரத்தின் ஆயர் பிரான்சிஸ் தேவகுமர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் செயலாளர் அகஸ்டின் பிரேம் ராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்,
25 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி ஆலய உறுப்பினர்களுக்கு பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர். இந்த விழாவில் 500க்கும் மேற்பட்ட சபை மக்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆலய ஆராதனைக்கு பின் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இந்த ஆராதனையில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வழிப்பட்டனர்.