மந்தகதியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி மழைநீர் வடிகால் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை பண்பாக்கம் வேர்க்காடு ஏனாதிமேல் பாக்கம், சின்ன சோழியம் பாக்கம், பெரிய சோழியம் பாக்கம், கீழ் முதலம்பேடு சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை பெய்தது. இதில் மந்தகதியில் கவரப்பேட்டை பகுதியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைபணி நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்க பணி காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாமல் சிக்கி கொண்டு நோயாளிகள் அவதியுற்றனர். மேலும் வாகனங்கள் சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கங்களில் மெல்ல ஊர்ந்து சென்றது. கவரப்பேட்டை சத்தியமேடு நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் வசதி முறையாக மேற்கொள்ளப்படாததால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து குளம் போல் தேங்கி நின்றது. இதனால் கவரப்பேட்டை பஜார் பகுதிக்கு வந்து செல்லும் வாகன ஓட்டிகள் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தேங்கி நின்ற மழை வெள்ள நீரால் கடும் இன்னலுக்கு ஆளாகினர்