மீஞ்சூர்: ஜடாமுனீஸ்வரர் கோவிலில் அம்மன் தாலி கொள்ளை

74பார்த்தது
மீஞ்சூர் புங்கம்பேட்டில்
ஜடாமுனீஸ்வரர் கோவிலில் பூட்டை உடைத்து துர்க்கை அம்மனின் 2 1/2சவரன் தங்க சங்கிலி கொள்ளை
மர்ம நபர்கள் கைவரிசை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட புங்கம்பேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஜடாமுனீஸ்வரர் ஆலயத்தின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து துர்க்கை அம்மன் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்கத் தாலியை மர்ம நபர்கள் திருடிக் கொண்டு அங்கிருந்த உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர் கோவிலை திறக்க வந்த கோவில் நிர்வாகி பிரகாஷ் பூட்டு உடைக்கப்பட்டு அம்மனின் தாலி கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார் இது குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கோவிலில் அம்மன்தாலியை கொள்ளையடித்த மர்மநபர்களை
போலீசார் தேடி வருகின்றனர் குடியிருப்பு பகுதியில் கோவிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி