2026 சட்டமன்றத் தேர்தல்.. திமுகவினருக்கு முதல்வர் உத்தரவு

80பார்த்தது
2026 சட்டமன்றத் தேர்தல்.. திமுகவினருக்கு முதல்வர் உத்தரவு
சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை உடனே தொடங்குங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் பேசிய அவர், துண்டுப் பிரசுரங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள் என மக்கள் இயக்கத்தை தொடங்க வேண்டும். ஒவ்வொரு உடன்பிறப்பும், ஒரு இயக்கம் என்று சொல்லத்தக்க வகையில் தேர்தல் பணிகளை  தொடங்குங்கள். 7வது முறையும் ஏற்றம் காண்போம் என்று கோடிக்கணக்கான தொண்டர்களது உள்ளத்துக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி