திருச்சி: பூட்டியிருந்த வீட்டில் தங்கநகை திருட்டு
வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இன்னிசை. சம்பவம் நடந்த நேற்று முன்தினம்(செப்.23) தனது மகளுடைய பிரசவத்திற்காக மணப்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று இருந்தார். நேற்று(செப்.24) வீடு திரும்பி வந்து பார்த்தபொழுது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஏழு சவரன் தங்க நகைகள் ரூ. 2000 ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து இன்னிசை வையம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.