துறையூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முதியவர் சின்னதுரை வயது 69 சம்பவம் நடந்த நேற்று கிழக்குவாடி பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது கவனக்குறைவாக இருசக்கர வாகனத்தை ஒட்டி நிலைத்தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சின்னதுரை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்த தகவலின் பெயரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் சின்னதுரையின் உடலை துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.