பிரபல யூ டியூபர் ஹர்ஷா சாய் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக சின்னத்திரை நடிகை புகார் அளித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புகார் அளித்த இளம் நடிகை, பணம் பறிப்பதற்காக என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அளித்துள்ளனர். என்னைப் பற்றி உங்களுக்கு தெரியும், உண்மை விரைவில் வெளிவரும்” என குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு பணம் பொருள் கொடுத்து உதவி செய்து யூடியூப்பில் பிரபலமானவர் ஹர்ஷா சாய்.