துறையூரில் வெளுத்து வாங்கிய கனமழை

577பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் இன்று மதியம் நான்கு மணி அளவில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பொழிந்தது. துறையூர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதை தொடர்ந்து நான்கு மணி அளவில் சாரல் மழை பொழிய தொடங்கியது பின்னர் சுமார் 30 நிமிடம் நல்ல மழை வெளுத்து வாங்கியது. இதனால் துறையூர் நகர் மற்றும் பெருமாள் மலை அடிவாரம் கீரம்பூர் காளிப்பட்டி கரட்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் குளிர்ந்த சூழ்நிலை நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி