துறையூர் திருச்சி சாலை உள்ள ரத்னா ஹோட்டல் என்ற உணவகத்தில் தமிழக அரசின் சத்துணவு முட்டைகளை பயன்படுத்தி ஆம்லெட் ஆப் ஆயில் விற்பனை நடைபெறுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து நேற்று 19ஆம் தேதி அன்று வட்டாட்சியர் தலைமையில் அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. உணவகத்தின் உரிமையாளர் ரத்தினம் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மதுராபுரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி என்பவரிடமிருந்து முட்டைகளை வாங்கியதாக அவர் வாக்குமூலம் அளித்தார் இதைத் தொடர்ந்து சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி துறையூர் போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.