திருச்சி துவாக்குடி மங்கவனம் பகுதியில் துவாக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது. வாழவந்தான் கோட்டை சேர்ந்த பொன்மருது சரவணன் ஆகிய இருவரும் விற்பனை நோக்கத்திற்காக கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் எடையில் உள்ள 10 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.