துறையூர் அருகே உள்ள சிக்கதம்பூரை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் தனது நண்பரான பெரியண்ணன் என்பவரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள பாலாஜி திருமணம் மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பின்னால் வந்த கார் ஒன்று இவர்களுடைய பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கீழே விழுந்த இருவரும் காயமடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரான பெருமாள் பாளையத்தை சேர்ந்த அமிர்தராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து துறையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.