துறையூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமையில் இன்று (செப்.10)நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மை பணிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தரவேண்டிய ஊதியம், துறையூர் நகராட்சிக்கு சொந்தமான வாகனங்களை பழுது பார்ப்பதற்கான செலவுகள் உள்ளிட்டவை அடங்கிய 51 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.